முக்கிய பௌத்த பிக்கு ஒருவர் விரைவில் கைது! சிக்கலில் இரு பிரபலங்கள்..
இலங்கையின் முக்கிய பௌத்த பிக்கு ஒருவர் விரைவில் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அரசியல் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக, அந்தக் கட்சியின் செயலாளர் பதவியை வகித்த ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரும், முன்னாள் பொலிஸ் மா அதிபரும்
அரசியலில் பிரபலமான ஒரு பௌத்த பிக்கு மீது இந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த பௌத்த பிக்கு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் அமைச்சர் ஒருவரும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட நபர், இந்த சம்பவம் குறித்து அப்போதைய ஜனாதிபதியை சந்தித்து முறையீடு செய்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கடத்தல் நிகழ்ந்ததாக பாதுகாப்பு தரப்புக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, நீண்ட விசாரணைகளுக்கு பின்னர், இந்த கடத்தலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
