யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நாக விகாரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(1) நடைபெற்றுள்ளது.
பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இதனையடுத்து, சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நேற்றுமுன்தினம் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam