சட்டவிரோத சுருக்கு வலை! மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் குற்றச்சாட்டு

Batticaloa Sri Lanka Navy Sri Lanka Fisherman Ministry of Fisheries of Sri Lanka
By Bavan Oct 15, 2026 08:22 AM GMT
Report

மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில உத்தியோகத்தர்கள் அதன் ஆதாரத்தை அழித்தும் அதற்கு பதிலாக பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றில் ஒப்படைத்து பொய்யான தகவலை கொடுத்து நீதிமன்றத்தை தவறான முறையில் வழிநடத்தி வருகின்றதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சுருக்குவலை உரிமையாளர்களிடம் மாதாந்தம் பல இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கப்பம் பெற்று கடல் வளத்தை அழித்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக மாநாடு நேற்று (14.10.2026) அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சுருக்கு வலைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முதலாம் திகதி பாலமுனை, மற்றும் பூநொச்சிமுனை கடலில் சுருக்குவலைகள் கடலில் இருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்லடி கடற்படை முகாம் கடற்படையினர் சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான 5 சுருக்கு வலைகளை கைப்பற்றினர்.

சட்டவிரோத சுருக்கு வலை! மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் குற்றச்சாட்டு | Illegal Fishing Net Seized

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுருக்கு வலையை 2ம் திகதி மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சுருக்கு வலைகளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு அதனை சட்டவிரோத சுருக்கு வலை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கு பதிலாக பழைய சிறிய சுருக்கு வலைகளை அவர்களிடம் வாங்கி கொண்டு அதனை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

இந்த திணைக்களத்தில் கடமையாற்றும் ஒரு சில உத்தியோகத்தர்கள் நீண்ட காலமாக இவ்வாறு சட்டவிரோமாக சுருக்குவலையை கடற்படையினர் கைப்பற்றி வழங்கப்படும்போது அந்த சுருக்கு வலைக்கான ஆதாரமான வலையில் உள்ள கம்பியிலான வளையம் அந்த வளையத்தின் ஊடாக செல்லும் கயிறு என்பவற்றை அகற்றி சுருக்குவலை ஆதாரத்தை அழித்து சுருக்குவலை இல்லை என நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை வழங்கி சுருக்குவலை உரிமையாளர்களை காப்பாற்றி மீண்டும் அவர்களின் கரங்களுக்கு சட்டவிரோத சுருக்குவலையை வழங்கிய சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளது.

2024 ம் அண்டு சட்டவிரோத சுருக்குவலை வைக்கப்பட்டிருந்த சிறிய கொட்டகையை கடற்படையினருடன் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் முற்றுகையிட்டு கதவை உடைத்து கைப்பற்றி அதனை நீதிமன்றில் ஒப்படைக்காது கிண்ணியாவைச் சேர்ந்த சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு பல இலட்சம் ரூபாவுக்கு விற்றுள்ளனர்.

வழங்கப்படும் பொய்யான தகவல்கள்

இவ்வாறு கடந்த முதலாம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலையை உரியவர்களிடம் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள சில உத்தியோகத்தர்கள் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபாவும், இன்னொருவரிடம் 2 இலட்சம் ரூபாவும், இன்னொருவரிடம் 2 இலட்சம் ரூபாவுமாக, 3 பேரிடம் 8 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டு மீண்டும் அந்த சட்டவிரோத சுருக்குவலை உரிமையாளர்களிடம் கையளித்து விட்டு அதற்கு பதிலாக பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தை தவறான முறையில் வழி நடத்தியுள்ளனர்.

சட்டவிரோத சுருக்கு வலை! மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் குற்றச்சாட்டு | Illegal Fishing Net Seized

அத்துடன் கடற்றொழில் நீரியல்வள சில அதிகாரிகள் இந்த சட்டவிரோத சுருக்குலை பாவித்து மீன்பிடிப்பவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டு ஒரு கிழமைக்கு ஒரு படகுக்கு 25ஆயிரம் ரூபா வீதம் மாதம் ஒன்றிற்கு பூநொச்சிமுனை, நொச்சிமுனையில் இருக்கும் 8 சட்டவிரோத சுருக்கு வலைக்கும் 2 இலட்சம் ரூபாவை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் இலஞ்சமாக பெற்று வருகின்றனர்.

இவ்வாறு தமிழில் உள்ள பழமொழியான வேலியே பயிரை மேயந்த கதையாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் உள்ளது. மட்டக்களப்பு கடல் வளங்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் அழித்து வருகின்றது. எனவே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் திணைக்கள பணிப்பாளர் ஒரு விசேட குழுவை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US