யாழ்.கடற்பரப்பில் 13 பேர் கைது!
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையானது இன்றையதினம் (15) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை கரையோரம் மற்றும் கடற்பரப்புகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது
இந்த நடவடிக்கையின் முகமாக இன்று காலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 10 பேர் நான்கு படகுகளுடனும் உடமைகளுடனும் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஒரு படகு மூன்று பேருடன் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் அட்டைகளை அறுவடை செய்த போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
சட்ட நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், சட்டவிரோத சுருக்குவலை தொழில் தடை எனவும் அதனை செய்பவர்கள் தொடர் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனவும் வெற்றிலைக்கேணி கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
