சட்டவிரோத செயல்! வர்த்தகர் உட்பட நால்வர் கைது
புத்தளம் - நாகமடுவ பிரதேசத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணை
சந்தேகநபர்கள் பயணித்த கெப் வண்டியில் இருந்து அனுமதி பத்திரம் பெற்ற போர 12 துப்பாக்கி ஒன்றும் 04 வெற்றுத்தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட வர்த்தகர், சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் உட்பட, நால்வரும் புத்தளம் நகரைச் சேர்ந்தவர்கள் என வன்னாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் புத்தளம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் உட்பட வேட்டையில் இணைந்த ஏனைய சந்தேகநபர்கள் தலா ஐந்து இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        