பத்தாயிரம் ஆண்டுகள் இயங்கக்கூடிய பிரம்மாண்ட கடிகாரத்தை வடிவமைக்கும் பிரபல தொழிலதிபர்
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரரும் முன்னனி இணையவழி வர்த்தக நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
500 அடி உயரம் கொண்ட இந்தக் கடிகாரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் கட்டப்பட்டுவருகிறது.
இதற்கு தற்போது வரை 42 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிகாரத்திற்கு க்ளாக் ஆப் தி லாங் (Clock of the Long) எனப் பெயரிட்டுள்ளது.
1000 ஆண்டுக்கு ஒருமுறை ஒலி
இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதலில் இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்தக் கடிகாரம் என அந்நிறுவனம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        