யாழில் இடம்பெற்ற சட்டவிரோத செயல்
யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மணலேற்றி சென்ற நான்கு டிப்பரையும், அதன் சாரதிகளையும் கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(23.09.2022) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
கோப்பாய் சந்திக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் போக்குவரத்து பொலிஸார், நான்கு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனையிட்ட போது அனுமதி பத்திரமின்றி மணலேற்றி சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நான்கு டிப்பர் வாகனங்களையும், டிப்பரை செலுத்தி வந்த கிளிநொச்சி
மற்றும் விசுவமடு பகுதியைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்களையும் கோப்பாய்
பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
