சுமந்திரன் பதவி விலக வேண்டும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் பதவியில் இருந்து சி.வி.கே. சிவஞானத்தை விலகுமாறு அக்கட்சியின் காங்கேசன்தறை தொகுதிக் கிளை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போருக்கு அஞ்சியதில்லை! முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்....
குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு
குறித்த கடிதத்தில், பின்வரும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போது வலி. வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனு சமர்ப்பித்தலிலுள்ள முறைகேடுகள்.
2. 21.10.2025 அன்று காங்கேசந்துறை தொகுதிக்கிளைக்கு எதிராக போட்டிக்கிளை அமைக்கப்பட்டமை தொடர்பான முறைகேடுகள்.
3. 31.05.2026 அன்று புதிய யாழ்ப்பாண மாவட்ட கிளை அமைக்கப்பட்டதிலுள்ள முறைகேடுகள்.
இவற்றை சுட்டிக்காட்டி, இக்காரணங்களுக்காக பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து உடனடியாக விலகுமாறு காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை கோரியுள்ளது.

மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri