தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போருக்கு அஞ்சியதில்லை! முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது.
அவர்கள் பயந்திருந்தது அமைதிக்கே. அதாவது, சமாதானத்தை அவர்கள் தங்களது பலவீனமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்கள் என்று முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் எப்போதும் அவர்களின் ஒட்டுமொத்த செயல்முறையிலுமே மிகவும் தந்திரமான செயற்பாடுகளையே முன்னெடுத்தனர்.
அவரின் தனிப்பட்ட கருத்து
எனது தனிப்பட்ட கருத்துப்படி,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குத் தவறிய இடங்கள் மிகக் குறைவே. பிரதானமான தவறு என்னவென்றால், 2005 இல் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி தாமாகவே வம்பை விலைக்கு வாங்கியதாகும்.
அதேபோன்று தான் ரஜீவ் காந்தியின் படுகொலையும். இப்படி சில பாரதூரமான தவறுகள் அவர்களினால் செய்யப்பட்டன. ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கும் அவர்கள் தங்களது வழக்கமான ஏமாற்று வித்தையையே செய்தார்கள்.
இந்திய அமைதிப்படையை பிரேமதாச ஜனாதிபதி விரட்டினார். அவர்கள் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதாகக் கூறி வந்தார்கள்.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பரிமாற்றப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது. அவர்கள் பலவீனமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சமாதானத்தை முன்னிறுத்திச் செயற்பட்டே மீண்டும் பலமடைந்தார்கள்.
2009 இலும் அதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு நடக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவையும் ஏமாற்றினார்கள்.
அது சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ 'மை பெல்லி இஸ் வைட்' (My Belly is White ) என்று சற்றே பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தப் புத்தகத்தில் அனைத்து விபரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri