கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..

Gotabaya Rajapaksa Sri Lanka Magistrate Court Easter Attack Sri Lanka Suresh Salley
By Kanthan Jul 14, 2026 02:06 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் சுரேஷ் சலே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் ஏழு பேர் மிகவும் இரகசியமான வாக்குமூலங்களை CID யிடம் வழங்கியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு சுரேஷ் சலே நேரடியாகவே தொடர்புடையவர் என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

திடீரென பதவி விலகிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்

திடீரென பதவி விலகிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்

ஏழு பேரின் இரகசிய வாக்குமூலம்

அதாவது சுரேஷ் சலேயைச் சுற்றி இருந்த அவரது தீவிர ஆதரவாளர்களான ஏழு பேர் தான் இந்தச் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக, இந்த ஏழு சாட்சிகளும் கொழும்பு கோட்டை நீதவானிடம் தனிப்பட்ட முறையில், இரகசியமாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அப்போது கோட்டை நீதவானாகச் செயல்பட்டவர் தான் இசுரு நெத்திகுமார.

அப்போது அவர் முன்னிலையில்தான்,ஏழு பேரும் மிகவும் இரகசியமான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். பொதுவாக, ஒரு நீதவான் முன்னிலையில் இவ்வாறானதொரு வாக்குமூலம் மிகவும் இரகசியமாகவே வழங்கப்படும்.

கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்.. | Easter Attack Suresh Sally Gotabaya

அவ்வாறான வாக்குமூலங்கள் பகிரங்க நீதிமன்றத்தில் பெறப்படுவதில்லை. நீதவானின் உத்தியோகபூர்வ அறையினுள் (Chamber) மிகவும் இரகசியமாகவே பெறப்படும்.

அப்பொழுது, அந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கும்போது அங்கு நீதவான், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் ஆகிய மூவர் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள்.

அதற்கு மேலதிகமாக, இரகசிய வாக்குமூலத்தை வழங்கும் நபர்கள் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். அந்த ஏழு நபர்களும் கூட தனித்தனியாகத்தான் அழைக்கப்படுவார்கள், ஒன்றாக அல்ல.

 பார்க்க முடியாக வாக்குமூலம்

அவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகு, அதனை எதிர்த்தரப்போ அல்லது வழக்காளித்தரப்போ எந்தவொரு தரப்பினரும் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை.

அதன் பிறகு நீதவான் அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் அதை தனித்தனியாக முத்திரையிட்டு (Seal) அவற்றை நீதவானின் தனிப்பட்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் (Safe) வைப்பார்.

அதை எந்தவொரு நபரும் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏதேனும் ஒரு சட்டப் பிரச்சினை ஏற்படும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய சட்டரீதியான ஒரு தீர்மானமிக்க கட்டத்தில்தான் கிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் இருக்கும் அந்தப் பெட்டகத்தில் முத்திரையிடப்பட்டுள்ள வாக்குமூலங்களை எடுப்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை. நீதவானுக்குக் கூட உரிமை இல்லை.

கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்.. | Easter Attack Suresh Sally Gotabaya

ஒருவேளை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டால், அப்போது கோட்டை நீதவான் நீதிமன்றப் பெட்டகத்தில் உள்ள அந்த இரகசிய வாக்குமூலங்களை வழக்கை விசாரிக்கும் அடுத்த நீதிமன்ற நீதிபதியின் பெட்டகத்திற்கு மாற்ற முடியும்.

அது தவிர வேறு எந்தவொரு தரப்பினருக்கும் இந்த இரகசிய வாக்குமூலங்களைக் கொடுப்பதற்கோ அல்லது எடுப்பதற்கோ முடியாது. ஆனால் நீதவான் இசுரு நெத்திகுமார குறித்த இரகசிய வாக்குமூலங்கள் அனைத்தையும் சுரேஷ் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவிற்கு வழங்கியுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்குக்குக் கூட தற்போது பாரதூரமான ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.

ஏனென்றால், இரகசிய வாக்குமூலங்களை எதிர்த்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம், இப்போது இந்த வழக்கில் இரகசிய வாக்குமூலங்களை வழங்கியது யார்? அந்த வாக்குமூலங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது? அவை அனைத்தும் தற்போது கோட்டாபய ராஜபக்சவின் கைக்கு சென்றுள்ளது.

இந்த விபரங்கள் அம்பலமான பின்னர், இசுரு நெத்திகுமார நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு (JSC) மாற்றப்பட்டார். இவ்வாறு மாற்றிய உடனே, ராஜபக்ச குழுவும், அதேபோன்று 'ப்ரீ லோயர்ஸ்' (Free Lawyers) என்று சொல்லப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன உள்ளிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் அதற்கு எதிராக பாரிய குரல் எழுப்பினர்.

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US