தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..

Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician
By Rakesh Jul 13, 2026 10:59 PM GMT
Report

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன.

இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மதியம் கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர்.

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் ஒரே மேடையில் இருந்து இந்த அறிவிப்பை நேற்று விடுத்தனர்.

விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்

விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்

பொதுவான பிரச்சினைகள் 

இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம் என்ற தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு, "இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்.. | Tamil Parties United For Tamil People

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர். இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. 

அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசிடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சூடான் தங்க வர்த்தகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

சூடான் தங்க வர்த்தகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

மாகாண சபைத் தேர்தல்கள் 

மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்.. | Tamil Parties United For Tamil People

மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்தமையுடன், இந்த விடயங்களில் பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்" என்றுள்ளது.

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்: மேலும் இரண்டு மாகாணங்களுக்கு பரவியதால் மக்கள் அச்சம்

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்: மேலும் இரண்டு மாகாணங்களுக்கு பரவியதால் மக்கள் அச்சம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US