நீறு பூத்த நெருப்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி

By Rakesh Feb 14, 2024 08:00 PM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது என்று அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

எனினும், மாநாடு நடைபெறும் வரைக்கும் பொதுச்செயலாளர் பதவி இழுபறி நிலை தொடரும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு வாக்கெடுப்பின் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது. அதற்கு அமைவாக சிறீதரன் தெரிவாகியிருந்தார்.

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் நீடித்தால்...! சிறீதரனிடம் சம்பந்தன் கூறிய முக்கிய முடிவு

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் நீடித்தால்...! சிறீதரனிடம் சம்பந்தன் கூறிய முக்கிய முடிவு

நிர்வாகப் பதவி தெரிவு

இதன் பின்னர் கட்சியின் ஏனைய நிர்வாகப் பதவிகளுக்கான தெரிவு தொடர்பான மத்திய குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் என்பன கடந்த மாதம் திருகோணமலையில் நடைபெற்றன.

நீறு பூத்த நெருப்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி | Ilankai Tamil Arasu Kachchi Secretary Post

பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகக் குழுவுக்கான பெயர்கள் மத்திய குழுவில் தெரிவு செய்யப்பட்டு அது பொதுக் குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டது.

பொதுக் குழுவில் இதன்போது குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சியின் தேசிய மாநாடும் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் குழப்பம் நீடித்தது.

பொதுச்செயளாளராகத் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் குகதாசனின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனுடைய பெயரும் அந்தப் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் நீடித்தது.

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனிக்கும் கனடா

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனிக்கும் கனடா

இழுபறி நிலை

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் சி.சிறீதரனும் பங்கேற்றிருந்தார்.

நீறு பூத்த நெருப்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி | Ilankai Tamil Arasu Kachchi Secretary Post

இழுபறி நிலையிலிருந்த பொதுச்செயலாளர் பதவியை குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் இருவருக்கும் சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதலாவது வருடம் யார் பொதுச்செயலாளர் பதவியை வகிப்பது என்பதிலேயே இழுபறி நிலை நீடித்த நிலையில் அதற்கு தற்போது இணக்கம் காணப்பட்டது.

முதலாவது வருடம் குகதாசனுக்கும், அடுத்த வருடம் ஸ்ரீநேசனுக்கும் வழங்க தற்போது இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமைவாக எதிர்வரும் 19ஆம் திகதி கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் நடைபெறவுள்ளது என்று கட்சியின் தலைவர் சிறீதரன் தெரிவித்தார்.

எனினும், நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் விடயம் எதிர்வரும் 19ஆம் திகதி – திங்கட்கிழமையன்று – காலையில், திருகோணமலையில், கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னர் பொதுக் குழு கூடும்போது, சுவாலை விட்டு விளாசி எரியும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

வடக்கிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கேள்வி

வடக்கிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கேள்வி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US