புரியாத புதிராக முடிவடையும் எனது நீதித்துறை வாழ்க்கை - இளஞ்செழியன் ஆதங்கம்
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று(01.02) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்கள் உள்ளன. 12.01.2025 இல் இருந்து அதற்கு தகமையானவன் நான். நான் தகமையாலும், இலக்கம் 1 இன்றில் இருப்பதாலும் நான் தகுதியானவன். எனது பிறந்த தினம் 20.01 ஆகும். மேல் நீதிமன்றம் 61 வயதை அடையும் போது முதல்நிலை நீதின்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள். 28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுகிறது. வேதனையா, சோதனையா, சாதனையா எதுவும் புரியவில்லை.
அனைத்தும் நல்லதிற்கே என மனதை திருப்திப்படுத்தக் கூட முடியவில்லை. ஆனால் இன்று பெருவிழாவை வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் ஒழுங்கமைத்து வடக்கு - கிழக்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் இங்கு வருகை தந்ததையிட்டு உங்கள் நன்றி உணர்வை மதிக்கிறேன்.
நீங்கள் அருகில் நிற்கும் போது எனக்கு புத்துணர்வு வருகிறது. இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு உள்ளுணர்வாக கிளம்புகின்றது. இருப்பினும், சந்தோசமாக போவதற்கு நான் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |