முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் (Video)

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation Death
By Thileepan Jun 01, 2023 12:10 PM GMT
Report

வவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை வழக்கில் சக சாரதிகளான இரு எதிரிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு முதலாம் எதிரியை கொலைக் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டாம் எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள சம்பவம்

இக்கொலைக் குற்றச் சம்பவம் 28.01.2013 வவுனியா - மரக்காரன்படை எனும் பிரதேசத்தில் இடம்பெற்றது.

விலா எழும்பு உடைக்கப்பட்டு, கூர்மை அற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 வெளிக்காயங்கள் இரு உட்காயங்கள் காணப்பட்ட நிலையில் வீதியில் முச்சக்கரவண்டியுடன் உடல் காணப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் (Video) | Ilancheliyan Vavuniya Case

இறந்து போனவரும் முதலாம், இரண்டாம் எதிரியும் அன்று இரவு சக சாரதியின் வீடு குடிபுகுதல் விழாவிற்கு சென்றுள்ளமை, நிகழ்ச்சி முடிந்து முதலாம், இரண்டாம் எதிரிகளுடன் இறந்தவரும் இன்னும் இருவர் இறுதியாக நின்றமை, நடுநிசி 12 மணிக்கு இறந்தவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டமை என்பன நிரூபிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான சாட்டி யாதெனில், மறுநாள் (29.01.2013) காலை 8.30 மணியளவில் முதலாம் எதிரி முச்சக்கரவண்டியுடன் அவரது முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு வந்த போது அவரது முச்சக்கரவண்டியின் முன் கண்ணாடி, பின் இருக்கைகளில் இரத்த சிதறல் காணப்பட்டதை அவதானித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி சாரதி “இது என்ன இரத்தச் சிதறல்” என முதலாம் எதிரியிடம் வினவிய போது அது தனது கையில் ஏற்பட்ட காயத்தால் வந்த இரத்தம் என முதலாம் எதிரி வித்து னஅவ்விடத்தில் இருந்து தப்பி ஓடி முச்சக்கரவண்டியை கழுவி உள்ளார்.

3 இடங்களில் இரத்தத் துளிகள்

பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்ததை அடுத்து முச்சக்கரவண்டி கழுவப்பட்டிருந்த போதும் 3 இடங்களில் இரத்தத் துளிகள் காணப்பட்டுள்ளன. அதில் ஒன்று எலுமிச்சை பழத்துடன் கட்டப்பட்ட வேப்பிலையில் காணப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிகள் DNA சோதனைக்கு அனுப்பப்பட்டபோது இறந்தவரின் இரத்தமே முதலாம் எதிரியின் முச்சக்கரவண்டியில் காணப்பட்ட இரத்தம் என சிரேஷ்ட விஞ்ஞானி ரூபான் இளமப் பெரும மரபணு சோதனையை நீதிமன்றில் சமர்ப்பித்து சாட்சியமளித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் (Video) | Ilancheliyan Vavuniya Case

இதனையடுத்து, முதலாம் எதிரியை கொலைக் குற்றவாளி என இனங்கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பளித்த போது இறந்தவரின் உறவினர்கள் மற்றும் முதலாம் எதிரியின் உறவினரின் அழுகைக் குரல்கள் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளை 15 நிமிடம் ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

குறித்த வழக்கை அரச சட்டத்தரணி தர்சிகா திருக்குமரநாதன், அவருடன் அரச சட்டத்தரணி ஆறுமுகம் தர்ஷன் ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் குறித்த வழக்கை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US