கொழும்பில் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய திட்டத்திலிருந்து விலகிய வெளிநாடுகள்
கொழும்பு துறைமுகத்தில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தென்னாசிய வணிக மற்றும் தளவாட மைய (SACLH) திட்டத்தை முற்றாகக் கைவிட அதன் பங்குதாரர்கள் தீர்மானித்துள்ளதாக சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளிப்புறத் தாக்கங்கள் மற்றும் திட்ட காலக்கெடுவில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற காரணங்களைக் கருத்திற்கொண்டு, திட்டத்தை இரத்து செய்வதே அனைத்துத் தரப்பினருக்கும் உகந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
26 மில்லியன் டொலர்
இதன் ஒப்பந்தக் கைச்சாத்திற்குப் பிறகு 30 நாட்களுக்குள் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒருமுறை நட்டஈடாக வழங்கவுள்ளது.

இத்தொகையானது சீன நிறுவனத்தின் ஆரம்ப முதலீடான 26 மில்லியன் டொலரிலிருந்து வரிகள் மற்றும் தாமதக் கட்டணங்கள் கழிக்கப்பட்டது போக மீதமான தொகையாகும்.
இத்திட்டத்தில் சீன நிறுவனம் 70வீத பங்குகளைக் கொண்டிருந்ததுடன், மீதமுள்ள 30வீத பங்குகள் உள்ளூர் நிறுவனமான அக்ஸஸ் இன்ஜினியரிங் (Access Engineering) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றிடையே தலா 15வீத சமமாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
இதனால், வழங்கப்படவுள்ள இந்த நஷ்டஈட்டுத் தொகை குறித்த மூன்று பங்குதாரர்களிடையேயும் பிரிக்கப்படவுள்ளது.
you may like this video