மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் மோதல்கள்! எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த வார இறுதியில் உச்சத்தை எட்டிய மசகு எண்ணெய் விலையில் முதலீட்டாளர்கள் இலாபப் பதிவு செய்ததால் இன்று(19.10.2026) எண்ணெய் விலைகள் சற்று சரிந்துள்ளன.
இதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.34 டொலர் குறைந்து 108.52 டொலர்களாக விற்பனையானது.
டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 13 சதம் (0.13 டொலர்கள்) சிறு சரிவைக் கண்டு 101.28 டொலர்களாக விற்பனையானது.
எண்ணெய் விலை
இந்தநிலையில்,அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் எடுக்கும் இந்த முயற்சி, ஹோர்முஸ் நீரிணையில் நடக்கும் கப்பல் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உண்மையான விநியோகப் பாதிப்புகளுக்குப் பெரிய தீர்வை வழங்கிவிடாது எனச் சந்தை பகுப்பாய்வாளர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
