இலங்கையில் கண் கலங்கி நின்ற இளையராஜா! பவதாரணியின் துயரமான இறுதி நாட்கள்
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் இலங்கையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரைப் பார்க்க கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த இளையராஜா அந்த இடத்தில் கண் கலங்கி நின்றதாக அவர்களுடன் இருந்த சிவில் செயற்பாட்டாளர் சுரேன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென கடந்த வாரம் உயிரிழந்தார்.
பவதாரணியின் இறுதி நாட்கள்
சிகிச்சைப் பெற வந்த பவதாரணி மற்றும் அவரது கணவருக்கு இலங்கையில் உள்ள சிவில் செயற்பாட்டாளர் சுரேன் உதவியாக செயற்பட்டு வந்தார்.
இந்தநிலையில், இலங்கையில் பவதாரணியின் இறுதி நாட்கள் தொடர்பில் அவர் எமக்கு தொடரந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் திரைப்பட நிறுவனம் ஒன்றின் ஊடாக பாடகி பவதாரணிக்கு உதவும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரது கணவர் சபரி என்னை தொடர்பு கொண்டார்.
அதன் பிறகு அவர்கள் தங்குவதற்கு வீடு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன். பவதாரணி முதலில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்தார். அதன் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
அந்த சமயம், இலங்கையில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா வருகைத் தந்து கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.
இதனை அறிந்த பவதாரணி தனது தந்தையை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்ததன் காரணமாக அவரை சந்திப்பதற்கான வாய்ப்பையும் பவதாரணியின் கணவர் சபரி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ஆனால், இதுதான் பவதாரணியின் இறுதி ஆசை என்று அறிந்திருக்கவில்லை போலும்.
அன்றைய தினம் இரவு வெகு நேரமாக தனது தந்தை இளையராஜாவை சந்தித்து பவதாரணி பேசிக் கொண்டிருந்தார்.
எனினும், மறுதினமே பவதாரணிக்கு உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு காலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று மாலை அவர் உயிரிழந்தார்.
பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என்பதையும் பவதாரணியின் கணவர் சபரி எனக்கு அறிவித்தார்.
அதன் பின்னர், இசைஞானி இளையராஜாவும் வைத்தியசாலைக்கு விரைந்து வந்ததுடன், மகளைப் பார்த்து கண் கலங்கி நின்றிருந்தார் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
