தமிழ், முஸ்லிம் மக்களை நெருங்க முடியுமாயிருந்தால் அதுவே நமது வெற்றி : மகிந்த ராஜபக்ச

People Election Douglas Devananda Mahinda Rajapaksa
By Kanamirtha Nov 02, 2021 04:06 PM GMT
Report

தமிழ், முஸ்லிம் மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செய்யக்கூடிய சிறந்த செயற்பாடாகும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய மட்டத்தில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விமர்சனத்தை எதிர்கொண்டது. அவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தக் கட்சி கட்டியெழுப்பப்பட்டது. எவ்வளவு அடக்குமுறைகள் விதிக்கப்பட்டாலும் ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டோம்.

எங்களைச் சிறையில் அடைத்து, மக்களை இருளில் வைக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. அதன் காரணமாகவே அரசாங்கத்தை மக்கள் எங்களிடம் பொறுப்பளித்தனர். மக்களின் குரலை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


அவர்களின் குரலை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நாம் அரசியலிலிருந்து ஒதுங்க எம்மால் தோற்கடிக்கப்பட்ட குழுவின் குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஊடுருவி பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.

ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன நாட்டில் நிலைக்க வேண்டுமெனில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போதே மக்கள் மத்தியில் அரசியல் செய்ய வேண்டியது அவசியம். எமக்கு வாக்களித்த மக்கள் பாரிய நெருக்கடியான நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற நெருக்கடி நிலைமையை எதிர்கொள்வதில் எமக்கு சிறந்த அனுபவம் இருக்கிறது. செய்யாத தவற்றுக்கும் மக்கள் அரசாங்கத்தையே நேரடியாகத் தாக்குவார்கள். இதுதான் யதார்த்தம். மக்கள் எம்மை நேரடியாகத் தாக்கலாம், பொம்மைகளைத் தீவைத்து எரிக்கலாம்.

அவற்றை எதிர்கொண்டு நாங்கள் மக்கள் மத்தியில் செல்லவேண்டும். மக்களிடம் செல்லும் அரசியலொன்று இன்று எமக்கு அவசியம் வேண்டும். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளை வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிட முடியாது என்று நான் நம்புகிறேன்.

வடக்கு கிழக்கிலுள்ள அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி ஜனாதிபதியொரு வரை நியமிக்க முடியாது என்ற நம்பிக்கை தொடர்ச்சியாக இருந்து வந்தது. சகல ஜனாதிபதி தேர்தல்களிலும் அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியிருந்தது.

இன்று எம்முடன் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அதற்கு சிறந்த சாட்சி. இருந்தபோதிலும், அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் ஜனாதிபதி ஒருவரை நியமிக்கக் கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

நாம் தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளக் கூடாது. அந்த இன மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செய்யக்கூடிய சிறந்த செயற்பாடாகும்.

அதேபோன்று அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் திட்டங்களுக்கு ஏற்றவாறு செயற்படாமல் பெரும்பான்மை பலத்தை எம்மால் பெற முடிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US