ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்க நேரிடும் எனில் அதிக வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்க நேரிடும் அபாயத்தை எதிர்கொண்டால், அதிக வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இது சர்வதேசச் சந்தையில் இலங்கையைக் குறைந்த போட்டி கொண்ட நாடாக மாற்றி விடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் வகையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒரு முன்மொழிவைச் செய்திருக்கிறது.
இந்தநிலையிலேயே பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
2021, ஜூன் 10 அன்று, ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் நிலையைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுமாறு ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
தொற்றுநோயின் மூன்றாவது அலைகளைத் தொடர்ந்து இலங்கை மூன்று வார முடக்கலுக்கு உட்பட்டுள்ளது. இந்தநிலையில் செயல்பட அனுமதிக்கப்பட்ட சில அத்தியாவசிய சேவைகளில் ஆடைத்தொழில் ஒன்றாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதிக வர்த்தகம் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும், ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துவதற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஜி.எஸ்.பி பிளஸின் நோக்கமாகும். இந்த நன்மை மூலம் இலங்கையின் ஏற்றுமதிகளில் 66% கட்டண வரி விலக்கு கிடைக்கிறது.
இது ஆடை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை உள்ளடக்கும். இந்த திட்டம் இலங்கைக்குள் புதிய தொழில்களுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஜிஎஸ்பி பிளஸ் திரும்பப் பெறுவது என்பது, இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியைப் பாதிக்கும் மற்றும் சர்வதேசச் சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நாடாக இலங்கையை மாற்றிவிடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சிரிமல் அபேரத்னே தெரிவித்துள்ளார்.
வறுமையான நாடுகள் என்ற வகையில், ஜிஎஸ்பி பிளஸ் எட்டு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது, தற்போது, ஜி.எஸ்.பி பிளஸ், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆர்மீனியா, பொலிவியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் ஐப் பெற இலங்கை சில சர்வதேச விதிகளை
அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இதில் சில விதிகளை இலங்கையால் செயல்படுத்த
முடியவில்லை என்று பேராசிரியர் அபேரத்னே மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 41 நிமிடங்கள் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
