நிமல் லான்சாவுடன் விவாதத்துக்கு சென்றால் நாமலே தோற்பார்: சனத் நிஷாந்த கருத்து
நிமல் லான்சா எம்.பியின் சவாலை ஏற்று அவருடன் விவாதத்துக்குச் சென்றால் நாமல் ராஜபக்ச எம்.பி. நிச்சயம் தோல்வியடைவார் என்று நாமலின் சகாவும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விமர்சிப்பதைவிடுத்து, முதுகெலும்பிருந்தால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து எதிரணியில் அமருமாறு நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு அணியினருக்கு நிமல் லான்சா சவால் விடுத்திருந்தோடு நாமல் ராஜபக்சவை பகிரங்க விவாதத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தோல்வி
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"நிமல் லான்சாவின் சவாலை ஏற்று நாமல் ராஜபக்ச விவாதத்துக்குச் செல்வார் என நான் நம்பவில்லை. அவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ச தோல்வி அடைவது உறுதி. நிமல் லான்சா என்பவர் ஹெரோயின், கஞ்சா, குடு பற்றியே பேசுவார்.

அவை பற்றிதான் அவருக்கு நன்கு தெரியும். ஆனால், நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியே தெரியும். அவருக்குப் போதைப்பொருட்கள் பற்றி தெரியாது. ஆகவேதான் விவாதத்துக்குச் சென்றால் நாமல் தோல்வியடைவார் என்று கூறுகின்றேன்" என தெரிவித்துள்ளார்.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri