திறைசேரியில் இருந்து மாயமான பெருந்தொகை பணம் - அநுர அரசுக்கு சவால்
திறைச்சேரியின் கணக்கிலிருந்து சர்வதேச ஹேக்கர் பணம் கொள்ளையிடப்பட்டால், ஒரு நாட்டின் அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்தாலும் அதை மீட்பது மிகவும் கடினம் என பேராசிரியர் அனுராதி ஹபுவாரச்சி தெரிவித்துள்ளார்.
பல்வேறு புலனாய்வு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்தாலும் அளித்தாலும், திறைச்சேரியில் ஏற்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை அரசாங்கத்தால் மீட்க முடியுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண மோசடிகளின் போதே பணத்தை மீளப் பெறுவது சவாலானது, ஆனால் ஒரு சர்வதேச ஹேக்கர் சம்பந்தப்பட்டிருக்கும் போது அது இன்னும் கடினமாகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஹேக்கர்கள்
இந்தப் பணத்தை மீட்க முடிந்தால் நன்றாக இருக்கும். இந்த ஹேக்கர்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பலமானவர்கள்.

ஹேக்கர்கள் எவ்வித தடயங்களையும் விட்டுச் செல்வதில்லை என்பதால் இந்த நிதியை மீட்டெடுக்க முடியாது என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.