கொழும்பில் IDM நேஷன்ஸ் கேம்பஸ் நடத்திய கௌரவிப்பு விழா
IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்ஸ்டிடியூட் இன் ஆளுமைகளை கௌரவிக்கும் விழா கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, கடந்த ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு - 11 கடற்கரை வீதியில் அமைந்துள்ள புதிய கல்யாண் மண்டபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌரவிப்பு விழா
இதேவேளை நிகழ்வில், IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளதுடன், ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன், அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோவின் முன்னிலையில் இடம்பெற்ற ஆளுமைகளை கௌரவிக்கும் விழாவில், கலைஞர்களான பாசில் மற்றும் கவிக்கமல் ஆகியோரின் வழிகாட்டலில் இசை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
ஆளுமைகள் கௌரவிப்பில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்ட கலைஞர்கள், சமூக சேவகர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri