மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சிவப்பு வலயமாக அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொது மக்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 66 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இரண்ட மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு காரணமாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
கல்லடி வேலூர்,சின்ன ஊறணி,திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இவ்வாறு முடக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளும் தற்போது சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது அலையில் 533 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 165 கோவிட் தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட
நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 250 கோவிட் தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்
நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
