முள்ளியவளை நாவலர் வீதியை சீரமைக்குமாறு ரவிகரனின் வலியுறுத்தலிற்கு ஐ.சி.டி.பி திட்ட பொறியியலாளரின் பதில்!

Mullaitivu Sri Lanka Nothern Province Thurairajah Raviharan
By Sudaron Jun 19, 2026 10:02 AM GMT
Report

முல்லைத்தீவு - முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கைக்கு,  ஐ.சி.டி.பி திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பதிலளித்துள்ளார்.

இதன்படி, குறித்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட பிறகு 3 தொடக்கம் 4 மாதத்திற்குள் நாவலர் வீதியின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென அவர் குிறப்பிட்டுள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்றுமுன்தினம்(17.06.2026) இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி உபகுழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மருந்து விநியோக வாகனங்களில் போதை பொருள் கடத்தல்! அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்களை வெளியிடுகிறார் வைத்தியர் சமல் சஞ்சீவ

சுகாதார அமைச்சின் மருந்து விநியோக வாகனங்களில் போதை பொருள் கடத்தல்! அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்களை வெளியிடுகிறார் வைத்தியர் சமல் சஞ்சீவ

வீதியை சீரமைப்பு நடவடிக்கை

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக அந்த வீதியை மிக அதிகளவான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

முள்ளியவளை நாவலர் வீதியை சீரமைக்குமாறு ரவிகரனின் வலியுறுத்தலிற்கு ஐ.சி.டி.பி திட்ட பொறியியலாளரின் பதில்! | Ictp Engineer Responds To Ravikaran On Road Repair

ஏறக்குறைய 2.5 கிலோமீற்றர் தூரமான நாவலர் வீதியானது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. எனவே குறித்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒப்பந்தம் மறுப்பு

இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பதிலளிக்கையில்,

குறித்த நாவலர் வீதியானது உலகவங்கியின் நிதி ஒதுக்கீட்டில், ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த வீதியைச் சீரமைப்புச் செய்வதற்காக உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய ஒப்பந்த நிறுவனமொன்றுடன் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த வேலைத்திட்டம் அந்த நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை நாவலர் வீதியை சீரமைக்குமாறு ரவிகரனின் வலியுறுத்தலிற்கு ஐ.சி.டி.பி திட்ட பொறியியலாளரின் பதில்! | Ictp Engineer Responds To Ravikaran On Road Repair

குறித்த ஒப்பந்த நிறுவனம் பிறிதொரு ஒப்பந்தவேலையில் முறையற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாக கறுப்புப்பட்டியலில் சேர்க்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒப்பந்த நிறுவனத்துடன் மன்னார் மாவட்டத்தில் செய்து கொண்ட ஒப்பந்தமொன்றை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுறுத்தியுள்ளோம்.

அந்த வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியை மீளவும் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் பிற்பாடு இந்த நாவலர் வீதிச்சீரமைப்பு விடயத்தில் அந்த ஒப்பந்ததாரர் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுவருகின்றார். எனவே நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நாம் அந்த ஒப்பந்ததாரருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்தி, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளியைக் கோரி, வேறு ஒப்பந்ததாரரிடம் குறித்த வேலையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

சுரேஷ் சலேயை பரிசோதித்த 5 விசேட மருத்துவர்கள்! விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..

சுரேஷ் சலேயை பரிசோதித்த 5 விசேட மருத்துவர்கள்! விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..

புதிய ஒப்பந்தத்திற்கான நடவடிக்கை

ஒரு ஒப்பந்ததாரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு சில நடமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டியிருக்கின்றது.

அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. ஆகவே நாம் அந்த நடமுறைகளைப் பின்பற்றியே ஒப்பந்தத்தினை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

முள்ளியவளை நாவலர் வீதியை சீரமைக்குமாறு ரவிகரனின் வலியுறுத்தலிற்கு ஐ.சி.டி.பி திட்ட பொறியியலாளரின் பதில்! | Ictp Engineer Responds To Ravikaran On Road Repair

குறிப்பாக, நாவலர்வீதி சீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக்கொள்வதற்கு 75வீதமான நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

இவ்வாறு அந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்திவிட்டு, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் இந்த வேலையை கையளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்

நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US