புதிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆதரவு
இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி செவரின் சபாஸுக்கும் (Ms.Severine Chappaz) இடையிலான சந்திப்பு இன்று (25) நடைபெற்றது.
இந்தநிலையிலேயே, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
இதன்போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் திறன் மேம்பாட்டிற்காகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பாடு தெரிவித்தது.
அத்தோடு, காணாமல் போனவர்களைத் தேடுவதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்த ஆண்டு பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மனிதாபிமான நடவடிக்கை
இன மத பேதமின்றி , ஒரே இலங்கை தேசமாக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லும் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக "Sri Lankan Day" கொண்டாட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு முதல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி அதற்குத் தனது நன்றியையும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |