ஐஸ் போதைப்பொருள் கடத்திய வியாபாரியொருவர் கைது
ஏறாவூரில் பாதணியில் மறைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய வியாபாரி ஒருவர் ஏறாவூர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வியாபாரியிடமிருந்து போதைப்பொருள் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கட்டுப்பாடு அமுல் செய்யப்பட்டிருந்த வேளையில் இவர் காத்தான்குடி பகுதியிலிருந்து வாழைச்சேனை நோக்கி கர்ப்பிணியான தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போது ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் கடமையிலிருந்த பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மிக நுட்பமான முறையில் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருள் பக்கற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
37 வயதுடைய ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நீண்ட காலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபர்
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.