யாழில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனை: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின்போது சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டமைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (18.03.2024) இடம்பெற்றள்ளது.
இதன்போது ஐஸ் கிறீம் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 42 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்ட நபர் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அத்துடன் வழக்கு விசாரணைகளின்போது உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளரைக் கடுமையாக எச்சரித்த மன்று, அபராத பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
