முல்லைத்தீவில் உழவு இயந்திரம் விபத்து: நான்கு மாணவர்கள் காயம்
முல்லைத்தீவு - கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (18.03.2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
குறித்த பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள் பொருட்களை ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் அதில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை காயமடைந்த மாணவர்களில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தை பாடசாலை மாணவர்கள் செலுத்தினார்களா என்ற சந்தேகம் எழும் நிலையில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri