ஐசிசி கிரிக்கெட் விருதுகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் தயார்: இலங்கை வீரர்களும் உள்ளடக்கம்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன விருதுகள் 2024க்கான, முழுமையான இறுதித் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும் ஒரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு 2025 ஜனவரி இறுதிப்பகுதியில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதன்படி, ஐசிசி ஆண்கள் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுகளுக்காக, ஹரி புரூக் (இங்கிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோர் இறுதிப்பட்டியலுக்குள் தெரிவாகியுள்ளனர்.
இலங்கை வீரர்கள்
ஐசிசி பெண்கள் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் விருதுக்காக, சாமரி அத்தபத்து (இலங்கை), அமெலியா கெர் (நியூசிலாந்து), அன்னாபெல் சதர்லேண்ட் (அவுஸ்திரேலியா), லாரா வால்வார்ட் (தென்னாபிரிக்கா) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
ஐசிசி ஆண்கள் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்; விருதுக்காக, ஹரி புரூக் (இங்கிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
ஐசிசி ஆண்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்காக, வனிந்து ஹசரங்க (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்), செர்பேன் ரூதர்ஃபோர்ட் (மேற்கிந்திய தீவுகள்) ஆகியோர் இறுதிப்பட்டிலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி பெண்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு, சாமரி அத்தபத்து (இலங்கை), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), அன்னபெல் சதர்லேண்ட் (அவுஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென்னாபிரிக்கா) ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வளர்ந்து வரும் வீரர்கள்
ஐசிசி ஆண்கள் டி20க்கான ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்; விருதுக்காக, பாபர் அசாம் (பாகிஸ்தான்), டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), சிக்கந்தர் ராசா (சிம்பாப்வே), அர்ஸ்தீப் சிங்(இந்தியா) ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி மகளிர் டி20க்கான ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்காக, சாமரி அத்தபத்து (இலங்கை), அமெலியா கெர் (நியூஸிலாந்து), ஓர்லா பிரெண்டர்காஸ்ட்(அயர்லாந்து), லாரா வோல்வார்ட் (தென்னாபிரிக்கா) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான, ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து), சைம் அயூப் (பாகிஸ்தான்), சமர் ஜோசப் (மேற்கிந்திய தீவுகள்), கமிந்து மெண்டிஸ் (இலங்கை) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி வளர்ந்து வரும் பெண்களுக்கான ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்காக, அன்னெரி டெர்க்சன் (தென்னாபிரிக்கா), சாஸ்கியா ஹார்லி (ஸ்கொட்லாந்து), சுரேயங்கா பட்டீல் (இந்தியா), ஃப்ரேயா சார்ஜென்ட் (அயர்லாந்து) ஆகியோர் இறுதிப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |