இந்திய-அவுஸ்திரேலிய டெஸ்ட்டில் எதிர்பார்க்கப்படும் முடிவு: வானிலை அறிக்கை வெளியானது
போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்துக்கான மெல்பர்ன் நான்காவது டெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று(30.12.2024), இந்தியா, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 300இற்கும் அதிகமான ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை எதிர்கொள்கிறது.
வானிலை அறிக்கையை பொறுத்தவரையில், மழை பெய்யும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மேகமூட்டம் காணப்படும்.
4ஆவது நாள் முடிவில் அவுஸ்திரேலியா 333 ஓட்டங்கள் முன்னிலை வகித்த நிலையில், சவாலான இலக்கை அடைய இந்தியாவுக்கு சவாலான திருப்பம் தேவை என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்
இதற்கிடையில், தென்மேற்கில் இருந்து மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அதே வேளையில், அவ்வப்போது மணிக்கு 24 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று பந்து வீச்சாளர்களுக்கு சற்று உதவக்கூடும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தப்போட்டியில் முன்னதாக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 474 ஓட்டங்களை பெற்றது. அதற்கு பதிலளித்து ஆடிய இந்திய அணி 369 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நான்காம் நாள் ஆட்டமுடிவின்போது 9 விக்கட்டுக்களின் இழப்புக்கு 228 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |