இலங்கை கிரிக்கட் நிர்வாகத்துடன் ஐசிசி தலைவர் ஜெய ஷா உயர்மட்ட கலந்துரையாடல்
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக ஐசிசி தலைவர் ஜெய ஷா இலங்கை வந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களை ஷா சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்ததன் நோக்கம்
இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய இடைக்கால நிர்வாக ஏற்பாடு மற்றும் நாட்டில் விளையாட்டின் நிர்வாகத்திற்கான எதிர்கால வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விளையாட்டின் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஐசிசி தலைவர் ஜெய ஷா இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஷாவின் பயணம் குறித்து ஐசிசியோ அல்லது இலங்கை அதிகாரிகளோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri