ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசை : 16ஆவது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க
இலங்கை கிரிக்கெட் வீரர் பவன் ரத்நாயக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புதிய ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான லாகூர் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் 77 ஓட்டங்களைக் குவித்ததுடன், இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே அவரது முன்னேற்றத்துக்குக் காரணமாகும்.
இதன் மூலம் உலகின் முதல் 20 ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பவன் ரத்நாயக்க இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி
இதற்கிடையில், இலங்கைக்கு எதிராக 132 பந்துகளில் 167 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்தின் பென் டக்கெட் ஒரு இடம் முன்னேறி தனது சிறந்த தரவரிசையான ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் பகார் சமான் ஒன்பது இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், தென்னாபிரிக்காவின் மார்கோ யான்சனைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.