ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்
ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.
ஐரோப்பிய தகுதிகாண் சுற்றுகளின் நேற்றைய இறுதி நாள் போட்டிகளில் நான்கு அணிகள் மோதியிருந்த நிலையில் குறித்த இரண்டு அணிகளும் தங்களது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர்
இத்தாலியைப் பொறுத்தவரை, இது ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கான முதலாவது பிரவேசமாகும்.
இதுவரை 15 அணிகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த தொடருக்காக தகுதி பெற்றுள்ளன.
அதன்படி, குறித்த தொடருக்காக, இதுவரையில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
