இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வென்ற இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கட் தொடரை இந்திய மகளிர் அணி ,மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றி கொண்டுள்ளது.
இந்திய ஆடவர் அணி, இங்கிலாந்தில் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் மகளிர் அணியும் அங்கு கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில்...
இதனடிப்படையில் இரண்டு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடர் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய மகளிர் அணி, மூன்றுக்கு ஒன்று என்ற வெற்றியின் மூலம் தொடரை தமதாக்கியுள்ளது.
ஏற்கனவே இந்திய மகளிர் அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில் நேற்று, மன்செஸ்டரில் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது.
இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி,126 ஓட்டங்களை பெற்றது இந்திய அணி 17 ஓவர்களில் தமது அடைந்து 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 21 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
