இலங்கை வரும் இந்திய கிரிக்கட் அணி: தலைமையில் இருந்து நீக்கப்படும் ரோஹித்
2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் நடைபெறவிருந்த பங்களாதேஸ் அணிக்கு எதிரான வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் இரண்டு அணிகளும் பங்கேற்கவுள்ளன.
புதிய தலைவர்
தகவல்களின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ரோஹித் சர்மாவை ஒருநாள் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஏற்கனவே இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அடுத்த உலகக் கிண்ணத்துக்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கட்டில் தொடர்ந்து விளையாடும் ஒரு வீரரிடம் தலைமைப்பதவியை ஒப்படைக்க அணி நிர்வாகம் ஆர்வமாக இருக்கும்.
எனவே, ரோஹித் ஒருநாள் தலைமையில் இருந்து நீக்கப்பட்டு, சுப்மன் கில் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
