உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி
2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதல் முறையாக ஐசிசி ஆண்கள் செம்பியன்சிப் கிண்ண போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.
எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகளின் வெற்றியாளர் அணிக்கு, 2025 மார்ச் 9ஆம் திகதியன்று 2.24 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கிண்ணமும் பரிசளிக்கப்படும்.
இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் அதே நேரத்தில் தோல்வியடையும் அரையிறுதி போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு 560,000 அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.
பரிசுத் தொகை
ஐசிசி ஆண்கள் செம்பியன்சிப் தொடரில் ஒவ்வொரு போட்டியும் கணக்கிடப்படும் இதன்படி, ஒவ்வொரு குழு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 34,000 டொலர்கள் கிடைக்கும்.
ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் ஒவ்வொன்றும் 350,000 டொலர்களை சம்பாதிக்கும் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் கூட 140,000 டொலர்களை,தமது நாட்டுக்கு எடுத்துச் செல்லமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஐசிசி ஆண்கள் செம்பியன்ஸ் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளுக்கும் 125,000 டொலர்கள் பரிசுத் தொகை உறுதி செய்யப்படுகிறது.
இந்திய அணி
1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடத்தப்படும் முதல் உலகளாவிய கிரிக்கெட் போட்டி, இரண்டு வார கால போட்டிகளாக இருக்கும் போட்டிகள் 2025 பெப்ரவரி 19 முதல் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.
அதேநேரம் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மாத்திரம் துபாயில் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு எட்டு அணிகளும் நான்கு அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
