அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி
கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற, இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 174 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகப்பெரிய ஒருநாள் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில், டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்த பின்னர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை, ஒருநாள் தொடரை கைப்பற்றி, கிண்ணத்தையும் வெற்றி கொண்டுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி
இதில், குசல் மெண்டிஸ் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
சரித் அசலங்க 78 ஓட்டங்களை பெற்றார் நிசான் மதுஸ்க 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 24.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
அந்த அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith) ஆகக்கூடுதலாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
