டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் மீதான போர்க்குற்ற வழக்கைக் கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
சூடானின் டார்ஃபூர் பகுதியில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படை மீது 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான போர்க்குற்ற வழக்கில், கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா அபாகர் நுரைன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது.
வழக்கு திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம் கடந்த 2011ஆம் ஆண்டு பண்டா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டன.
இருப்பினும், வழக்கு பதிவாகி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், அவருக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் பலவீனமடைந்துவிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கை
"குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்களுக்கு பண்டாவே பொறுப்பு என்று நம்புவதற்குப் போதிய வலுவான ஆதாரங்கள் தற்போது இல்லை." அரசுத் தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், பண்டா மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

அதேவேளையில், எதிர்காலத்தில் போதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடர இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.