நான் சிங்கள பௌத்தனாகவே நாட்டை ஆட்சி செய்வேன் - ஜனாதிபதி கோட்டாபய
நான் சிங்கள, பௌத்த தலைவன். பெளத்த சித்தார்ந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படும் என இன்று ஆற்றிய சுதந்திர தின உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தான் சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தான் சிங்கள பெளத்தன் என்ற ரீதியில், பெளத்த சித்தார்ந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆட்சி செய்வேன். எனினும், நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமவுரிமை உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 7 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
