நேரம் வரும்போது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படும்: அர்ஜுன ரணதுங்க
சரியான நேரம் வரும்போது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி - கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு ஏதேனும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறீர்களா?
ஐசிசியுடன் பேச்சுவார்த்தை
“தற்போது ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து, ஐசிசியுடன் பேசுவதற்கு அவர்களை அனுப்பியுள்ளனர்.
தற்போதைய சட்டத்தின்படி, கிரிக்கெட் வாரியத்திற்குச் சென்று வேலையைச் செய்யலாம். எனினும் நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம், நாங்கள் செல்ல மாட்டோம்.
[G1BD ]
இந்தப் பிரச்சினை முடியும்வரை வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டோம். இலங்கை கிரிக்கெட்டிற்க்கு எந்த தடையும் இல்லை என்ற முடிவுக்காக காத்திருக்கிறோம். நேரம் வரும்போது இவற்றை மிக விரைவாக சரி செய்துவிடலாம்” என்றார்.

வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு (Video)

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
