உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்
அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்குச் சென்றுள்ளார்.

உக்ரைன் தலைவர்களை சந்திக்கவும் ஒரு முக்கியமான செய்தியை வழங்கவும் நான் இங்கு வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அமெரிக்கா அவர்களுடன் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து துணை நிற்கும்' என்று ஆஸ்டின், தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்டினின் இந்த பயணம், சுதந்திரத்துக்கான போராட்டத்தில் உக்ரைனுக்கான அசைக்க முடியாத ஆதரவை உலகுக்கு தெரிவிப்பதாக கீவ் அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் கூறினார்.
எந்தவித முன் அறிவிப்பில்லாத அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளரின் உக்ரைன் பயணம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri