அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்
எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னை கைது செய்வார் என அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போதும், வெறுப்பு நிலைமை ஏற்பட்டது. இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இஷாரா கைது
சிறப்பு அதிரடி படையின் நடவடிக்கையின் காரணமாக நேற்றையதினம் நேபாளத்தில் வைத்து இஷாரா கைது செய்யப்பட்ட போது, இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா நேற்று முன்தினம் இரவு நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் நேபாளத்தில் நடத்திய மூன்று நாள் சோதனையில் இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டது.
சிறப்பு நடவடிக்கை
நேபாள பொலிஸார் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் உதவியுடன் சென்ற ரொஹான் ஒலுகல, நேற்று முன்தினம் இரவு இந்த குற்றவாளிகளை கைது செய்தார்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ், பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல மற்றும் பொலிஸ் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோரால் கடந்த சனிக்கிழமை முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தை பொலிஸாரால் அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு ரொஹான் ஒலுகல தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
