செவ்வந்தி விவகாரத்தில் அதிரடி நகர்வு.. இன்று நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (15) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அறுவரும் நேபாளத்தில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு தொழில்நுட்ப நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்முனை சோதனை
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட கணினி தரவு பகுப்பாய்வு மற்றும் களத்தில் உள்ள உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், நேபாள பொலிஸ் துறையின் தலைமையில் இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தபோது இஷாரா செவ்வந்தி பிடிபட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொலைபேசி அழைப்பின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த செவ்வந்தி, சூசகமான முறையில் வெளியில் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரை நாடுகடத்த உதவிய ஜே.கே. பாய் என்ற நபரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி கடவுச்சீட்டு
செவ்வந்தி, கைது செய்யப்பட்ட பிறகு, பொலிஸ் அதிகாரிகள் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிலையில், வேறொரு நாட்டின் பிரஜையாக அவரது முகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி, தனது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாராகி வந்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதிலிருந்து பல இடங்களில் தங்கியிருந்த இஷாரா செவ்வந்தி, பின்னர் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என இது தொடர்பான அனைத்து தகவல்களையும் முன்னதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே வழங்கியிருந்தார்.
அதற்கமைய, இந்தியாவிலிருந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைந்த செவ்வந்தி நேபாளத்தில் கடவுச்சீட்டை பெறுவதற்கான அனைத்து வசதிகளையும் கெஹல்பத்தர பத்மேவே மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அடுத்த நபர் நேபாளத்தில் செவ்வந்திக்கு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. பாய் என்ற நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள மேலும் நான்கு இலங்கையர்கள் நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த மேலும் இரண்டு அதிகாரிகள் இன்று நேபாளத்திற்குப் புறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, காவலில் உள்ள இந்த 6 சந்தேக நபர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இந்தக் குழு இன்று (15) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
