எனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு! ஜனாதிபதி எச்சரிக்கை
அதிரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் விமர்சித்தார்.
“நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன. நான், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்க வேண்டும் என சில தேரர்கள் விரும்புகின்றனர்.
அத்துடன், நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மக்களுக்காக உழைக்க விரும்புவதாக” ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri