அரசியலுக்காக சுவிஸ் குடியுரிமையை கைவிட்டேன்: ஆனால் இன்று? கடும் அதிருப்தியில் பிரபல நடிகை

Politics Swiss SLPP Geetha Kumarasinghe Citizenship
By Steephen Nov 28, 2021 09:51 AM GMT
Report

அரசாங்கத்துடன் தொடர்பான தான் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்க ( Geetha Samanmali Kumarasinghe) தெரிவித்துள்ளார்.

வாராந்த செய்தி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி: நீங்கள் அதிருப்தியில் இருக்கின்றீர்களா?.

பதில்: எனது மனசாட்சிக்கு இணங்க கூறுவதாயின் நான் அரசாங்கம் குறித்து அதிருப்தியில் இருக்கின்றேன். மிகவும் அதிருப்தியில் இருக்கின்றேன். நான் யோகி இல்லையே.

கேள்வி:  நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கத்தின் மீது ஏன் அதிருப்தியில் இருக்கின்றீர்கள்?.

பதில்:  நான் தனிப்பட்ட இலாப நோக்கங்களை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது தற்போது கௌரவத்தை விட அகௌரவமாக மாறியுள்ளது.

12 ஆண்டுகளாக நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அரசியலுக்காக நான் எனது சுவிஸர்லாந்து குடியுரிமையை இரத்துச் செய்தேன்.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியில் நான் உட்பட 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 50 பேருக்கு மாத்திரம் அமைச்சு பதவிகளை வழங்கியதுடன் எனக்கு வழங்கவில்லை. இதற்கான காரணம் எனக்கு தெரியும்.

கேள்வி: உங்களால் அந்த காரணத்தை வெளியிட முடியுமா?. பதில் -நான் தற்போது இந்த காரணத்தை ஊடகங்களுக்கு வெளியிட மாட்டேன். நான் கொள்கை ரீதியான அரசியல்வாதி.

இதனால், எனக்கு வருத்தம் இருக்கின்றது. என்னை தரம் தாழ்த்தியுள்ளனர். எனக்கு எதுவும் இல்லையென்றாலும் எனக்கு வாக்களித்த காலி மக்களுக்கு நான் சேவை செய்வேன்.

தென் மாகாணத்தின் ஒரே ஒரு பெண் நாடாளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கீதா குமாரசிங்க காலி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, கீதா அச்சமின்றி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு எதிராக குரல் கொடுத்த பிரபல சிங்கள திரைப்பட நடிகை.

கீதா குமாரசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரை ஒன்றை நிகழ்த்தியதுடன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கூட்டு எதிர்க்கட்சியில் தான் உட்பட மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் எனவும் அவர்களில் இரண்டு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் தான் மாத்திரம் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அவ்வாறு செல்லாத தனக்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என்றாலும் எவருடைய வாலை பிடித்தாவது பதவிகளை பெற்றுக்கொள்ள தான் தயாரில்லை எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US