எனக்கு அமைச்சு பதவி வேண்டாம்! - அநுர பிரியதர்சன யாப்பா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் நோக்கில் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
“எஸ்.டபில்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க நினைவு தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கம, சுசில் பிரேமஜயந்த மற்றம் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஒன்று சேர்ந்தமையை அடுத்து புதிய கூட்டணி தொடர்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இதனை மறுத்த அநுர பிரியதர்சன யாப்பா குறித்த தகவல் வதந்தியாக இருக்கலாம் என தெரிவித்தார். சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது. எனினும், அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையில் தொடர்வதாக யாப்பா தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையில், ஏதெனும் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்கன்கிறதா என கேட்டபோது, அவ்வாற நோக்கம் தமக்க இல்லையென குறிப்பிட்டார்.
அரசாங்கம் உரிய மார்க்கத்தில் செல்ல வேண்டும் என்பதே தமது கோரிக்கையென குறிப்பிட்ட அவர், கட்சிக்குள்ளேயே இது தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
