தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையில் பட்ட திருவிழா : சாள்ஸ் வெளியிட்ட தகவல்

Government Charles Nirmalanathan UN Human Rights Tamil Genocide
By Dias Jan 04, 2022 05:21 PM GMT
Report

எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்குள்ள பெருமையுடன் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

நீண்ட இனவழிப்பையும், தமிழர்களது பூர்வீக நிலங்களை முறையற்ற விதத்தில் பறிப்பதும் என கொடூர ஆட்சி நடத்தும் இந்த இந்த அரசாங்க அமைச்சர்களின் பிரசன்னத்துடன், அவர்களின் அனுசரணையுடன் நடைபெறுவது வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எழுத்துமூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினரை பிரதம விருந்தினராக அழைத்து இந்த பட்டத் திருவிழா நடத்துவது 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச அரங்கிலிருந்து இல்லாது செய்வதற்குரிய அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையே இது.

நீண்டகாலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் முயற்சி வீண் போகும் வகையில் இந்த செயற்பாடு சர்வதேசத்தினுடைய பார்வை இனப்படுகொலை புரிந்தவர்களை அழைத்து இந்த பட்டத்திருவிழாவை நடாத்துவதானது சர்வதேச அரங்கிலிருந்து இலங்கை அரசாங்கத்தை தப்பிப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்கும்.

ஆகவே ஏற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் கொண்டு பட்டத்திருவிழா அரசியல் கலப்படமற்றவகையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

உடனடியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு இந்த மண்ணில் காலா காலமாக நடைபெற்று வரும் பட்டத் திருவிழா போன்று இம்முறையும் நடைமுறைப்படுத்த முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US