தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல: சட்டமா அதிபர்
தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
தனது முடிவுகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் விமர்சனங்களைத் தொடர்ந்து, சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவினர் அவரை நேரில் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
நீதிமன்றத்தில் தீர்வு காண முடியும்
இதன்போதே சட்டமா அதிபர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தனது தரப்பில் தவறு நடந்தால், அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியும் என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சட்டமா அதிபர் எவ்வித தலையீடுகளுமின்றி தன்னிச்சையாகவும் சுயாதீனமாகவும் செயற்படுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக, இதன்போது சட்டத்தரணிகள் உறுதியளித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam