குடும்பச் சண்டையால் மனைவியை சுட்டுப் படுகொலைசெய்த கணவன்!
இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணே மரணமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்படட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குடும்பச் சண்டையே இந்தக் கொலைச் சம்பவத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri