யாழில் கணவனின் பிரிவு தாங்காது மனைவியும் உயிர்மாய்ப்பு
யாழில் கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவியொருவர் தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (12.02.2023) பதிவாகியுள்ளது.
யாழ். 3ஆம் குறுக்குத் தெருவை சேர்ந்த செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்
நேற்று முன்தினம் (11.02.2023) குறித்த பெண்ணின் கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அந்தச் செய்தியைத் தொலைபேசி ஊடாக அறிந்த மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி நேற்று (12.02.2023) உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை
அதிகாரி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri